Environmental Education Record

சுற்றுச்சூழல் கல்வி பதிவேடு 
பொருளடக்கம்:
அறிமுகம் 
சுற்றுச்சூழல் கல்வியின் பொருள்
சுற்றுச்சூழல் கல்வியின் வரையறை
சுற்றுச்சூழல் கல்வியின் முக்கியத்துவம்
சுற்றுச்சூழல் கல்வியின் நோக்கங்கள்
சுற்றுச்சூழல் கல்விக்கான வழிகாட்டுதல்கள்
சுற்றுச்சூழல் சீரழிவு
சுற்றுச்சூழல் சீரழிவு உலகம் முழுவதும் உள்ள சமீபத்திய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள்
பள்ளி சுற்றுச்சூழல் ஆய்வு
கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்/வாசகம்/சிறு நாடகம்
படத்தொகுப்பு: சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் தேசிய / சர்வதேச அளவில்
முடிவுரை







அறிமுகம்:
சுற்றுச்சூழல் கல்வி (EE) என்பது சுற்றுச்சூழல் விழிப்புணர்வைப் புரிந்து கொள்ளுதலை வளர்க்கின்ற ஒரு சக்தி வாய்ந்த செயலாகும். சுற்றுச்சூழல் கல்வி மனிதனிடம் விரும்பத்தக்க மாற்றங்களை ஏற்படுத்து வதற்கான சுற்றுச்சூழலை திட்டமிடவும் வளர்க்கவும் செய்கிறது. சுற்றுச்சூழல் கல்வி சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான செயல்களை மேற்கொள்வதற்குரிய சூழ்நிலைகளையும் வாய்ப்பு களையும் உருவாக்குகிறது. 

சுற்றுச்சூழல் கல்வியின் பொருள்:
சுற்றுச்சூழல் கல்வி என்பது பல துறைகளை ஒருங்கிணைத்து கற்கும் செயல்முறையாக இருப்பதோடு, அதன் நோக்கம் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான அறிவு, மனப்பான்மை, திறன்கள், ஊக்கம் ஆகியவற்றை மக்களுக்கு அளிப்பதேயாகும். முறையான சுல்வியைப் போலவே சுற்றுச்சூழல் கல்லியும் நடத்தை மாற்றத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சுற்றுச்சூழல் கல்வி மூலம் பெறப்படும் கல்வி, மக்களின் விழுமங்களிலும் (Values) மனப்பான்மைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். 

சுற்றுச்சூழல் கல்வியின் வரையறை:

யுனெஸ்கோவின் கூற்றுப்படி:
"சுற்றுச்சூழல் கல்வி என்பது ஒரு கற்றல் செயல்முறையாகும், இது சுற்றுச்சூழல் மற்றும் அதனுடன் தொடர்புடைய சவால்கள் பற்றிய மக்களின் அறிவையும் விழிப்புணர்வையும் அதிகரிக்கிறது, தேவையான திறன்களை மேம்படுத்துகிறது.

"சுற்றுச்சூழல் கல்வி என்பது மனிதர்களுக்கு விழிப்புணர்வு, அறிவு, திறன்கள், மனப்பான்மை மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றைச் செய்யும் ஒரு செயல்முறையாகத் தோன்றுகிறது". - மிஸ்ரா (1993)

சுற்றுச்சூழல் கல்வியின் முக்கியத்துவம்:

சுற்றுச்சூழல் கல்வியின் முக்கியத்துவத்தை பின்வருமாறு குறிப்பிடலாம்.

இது குழந்தை மற்றும் வயது வந்தோரின் சுய தேவை பூர்த்தி மற்றும் சமூக வளர்ச்சிக்கு மிகவும் அவசியமாகும்.
இயற்கைச் சூழ்நிலையின் சமநிலை மற்றும் பல்வகை உணவுச் சங்கிலிகளைப் புரிந்து கொள்ள சுற்றுச்சூழல் கல்வி மிகவும் அவசியமாகும்.
உயிர் வாழ்தலுக்கும், பொருள்சார் பண்பாட்டுக் கூறினை வளர்ப்பதற்கும் சுற்றுச்சூழல் எவ்வாறு பயன்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டு போற்றிட இது முக்கிய பங்காற்றுகிறது.
இது இயற்கையையும் சமுதாயத்தையும் போற்றிடவும் அவற்றில் மகிழ்வுற வாழ்ந்திடவும் உதவுகிறது.
மனித இனத்தின் நீண்ட கால மற்றும் உடனடி நலனுக்குத் தேவையான சுற்றுச்சூழல் மாற்றங்களில் அக்கறை கொள்ள வைக்கிறது.
மக்கட்தொகைப் பெருக்கம், இயற்கை வளங்களில் குறைவு ஏற்படுதல், புவி வெப்ப உயர்வு போன்ற பல பிரச்சனைகளில் கவனம் செலுத்த வைக்கிறது.



சுற்றுச்சூழல் கல்வியின் நோக்கங்கள்:

1977-ல் பிலிஸி (Tbilisi) என்றஇடத்தில் நடைபெற்ற யுனெஸ்கோவின் அனைத்துலக மாநாட்டில் முறைப்படுத்தப்பட்ட மற்றும் முறை சாரா கல்வியின் அனைத்து நிலைகளுக்குமான சுற்றுச்சூழல் கல்வியின் நோக்கங்கள் உருவாக்கப்பட்டன. அவை பின்வருமாறு:

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, முழு சுற்றுச்சூழல் மற்றும் அதன் தொடர்புடைய பிரச்சனைகள் பற்றிய நுண்ணுணர்வை (உணர்வு மற்றும் மனப்பான்மைகள்) உருவாக்குதல்.

சுற்றுச்சூழல் பற்றிய அறிவு,பல்வேறு நேரடி அனுபவங்கள் மூலம் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சனைகளை உணர்தல்,

ஆகியவற்றைப் பெற்றிட உதவுதல்.சுற்றுச்சூழலின் அமைப்பு, செயல்கள், பிரச்சனைகள், சுற்றுச் சுழலின் உட்கூறுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் தன்மை ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவுதல்.

சுற்றுச்சூழல் பிரச்சனைகளைக் கண்டறியவும், தீர்க்கவும் தேவையான திறன்களைப் பெற உதவுதல்.

சுற்றுச்சூழல் பற்றிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான செயல்களில் முனைப்பாக ஈடுபட அனைத்து நிலைகளிலும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருதல்.

சூழ்நிலையியல், பொருளாதாரவியல், சமூகவியல், பண்பாட்டியல், அழகுணரியல், கல்வியியல் ஆகியவற்றின் அடிப்படையில் சுற்றுச்சூழலின் உட்கூறுகள் அடங்கிய கல்வி நிகழ்ச்சிகளை மதிப்பீடு செய்வதற்கான திறமையை உருவாக்குதல்.

சுற்றுச்சூழல் கல்விக்கான வழிகாட்டுதல்கள்:

குழந்தைகளிடம் சுற்றுச்சூழல் கல்விக்காக தனியானதொரு பாடத்தை சேர்த்து அவர்களின் சுமையை அதிகரிக்கத் தேவை இல்லை. ஒருங்கிணைந்த, பல்துறை பாட இணைப்பு முறை மூலம் முழுக்கண்ணோட்டத்தை உருவாக்கிட முயலவேண்டும். மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை விரவியிருத்தல் வேண்டும். ஆகையால் சுற்றுச்சூழல் பற்றிய கரிசனம் அனைத்து பாடத்துறை கற்பிப்பு வாயிலாகவும் உண்டாக்கப்பட வேண்டும். ஆனால் இரண்டாவது பகுதியைப் பொருத்த அளவில், ஒர் ஆசிரியர் அதிக வேலைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இணைப் பாடச்செயல்கள், உண்மை வாழ்க்கை சூழல்களை தொடர்புபடுத்தி கற்பித்தலோடு பொருத்தமாக இணைக்கப்படல் வேண்டும். இதனைச் செயல்படுத்த ஆசிரியர் பின்வரும் வகைகளில் பங்காற்ற வேண்டியுள்ளது.

1. தன்னுடைய பாடத்துறைக் கருத்துகளைக் கற்பிக்கும் போது, சுற்றுச்சூழல் பிரச்சனைகள் தொடர்பான தலைப்புக்களோடு இணைத்துக் கற்பித்தல் வேண்டும்.

2. முழுமையான சுற்றுச்சூழல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வையும்,(awareness) உய்த்துணர் ஆற்றலையும் (sensitivity) நாம் ஒவ்வொருவரும் பெற்றிட ஆசிரியர் உதவ வேண்டும்.

 3. சுற்றுச்சூழலிலுள்ள புதுப்பிக்கக்கூடிய, புதுப்பிக்க இயலாத வளங்கள் பற்றிய விழிப்புணர்வை ஆசிரியர் உருவாக்க வேண்டும்.

4. சுற்றுச்சூழல் சமநிலையில் உணவுச்சங்கிலி, உணவு வலை ஆகியவற்றின் பங்கை புரிந்துகொள்ள ஆசிரியர் விளையாட்டு முறைகளைப் பயன்படுத்தலாம்.

5. சுற்றுச்சூழல் பற்றிய ஆழ்ந்த அக்கறை மிகு உணர்வுகள், சமூக மதிப்புகள், சுற்றுச்சூழலைப் போற்றி பாதுகாத்து மேம்பாடடையச் செய்தலில் முனைப்புடன் பங்கேற்பதற்கான ஊக்கம் ஆகியவற்றை மாணவர்கள் பெற்றிட ஆசிரியர் உதவ வேண்டும்.

6. சுற்றுச்சூழல் பாதுகாப்பைத் தொடர்புபடுத்தி நாடகங்கள் நடத்துதல் போன்ற சில செயல்களில் ஆசிரியர் ஈடுபடலாம்.

7.சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான திறன்களை மாணவர் பெற்றிட ஆசிரியர் உதவ வேண்டும்.

8. உயிர்க்காட்சிசாலை, தேசியப் பூங்காக்கள், மாசுபட்ட நகரங்கள், மாசுபட்ட ஆறுகள், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்கு ஆசிரியர் களப்பயணங்களை அமைத்திடலாம்.

9. சூழ்நிலையியல் மற்றும் சமூக, அழகுணர்வு காரணிகளின் அடிப்படையில் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளையும் கல்வி நிகழ்ச்சிகளையும் மாணவர் மதிப்பீடு செய்ய ஆசிரியர் உதவ வேண்டும்.
 
10.சுற்றுச்சூழல் பிரச்சனைகளோடு தொடர்புடைய தலைப்பு களில் அவ்வப்போது விரிவுரைகள் நடைபெற ஆசிரியர் உதவ வேண்டும்.


சுற்றுச்சூழல் சீரழிவு:
‘சுற்றுச்சூழல் சீரழிவு' என்னும் சொல் பரந்து விரிந்த கருத்து ஆகும். 'ஒட்டுமொத்த சுற்றுச்சூழலின் தரம் குறைந்து கொண்டே செல்லுதல்' என்பது இதன் பொருளாகும். இது இயற்கையின் செயல்களாலும், மனித நடத்தைகளாலும், வட்டார, தேசிய மற்றும் சர்வதேச அளவில் நிகழ்கின்ற, சுற்றுச்சூழலின் தரத்தைக் குறைத்து சீர்குலையச் செய்யும் அனைத்து செயல்களையும் குறிப்பிட பயன் படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசடைதலே, அதன் தரம் குறைவதற்கு முக்கியக் காரணமாகும்.



சுற்றுச்சூழல் சீரழிவின் வகைகள்:

சீரழிவின் வகைகள் 'சுற்றுச்சூழல் சீரழிவு' இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

(I) மனித செயல்களின் விளைவாய் சுற்றுச்சூழலில் மாசுபடுவதால் ஏற்படுவது 
(II) பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும் இயற்கை நிகழ்வுகளான 'பேராபத்துகள்'(Hazards) அல்லது 'மீப்பெருத் தீங்குகள்' (Disasters) மூலம் ஏற்படுவது. இதன் கீழ் இயற்கைச் சீற்றங்களும் மனித செயல்களால் தூண்டப்படும் பேராபத்துகளும் உள்அடங்கும்.  

நிலச் சீரழிவு:

1) ஊட்டச்சத்து இழப்பு காரணமாக மண்ணின் இயற்கை வளம் இழப்பு.

2) மண்ணின் பண்புகளில் மாற்றங்கள்.

3) மண்ணின் மாசுபாட்டால் நீர் ஆதாரங்கள் மாசுபடுதல், இதன் மூலம் நீர்நிலைகளுக்கு மாசுபடுகிறது.

4) சுற்றுச்சூழலில் உருவாக்கப்பட்ட சமநிலையின்மை காரணமாக காலநிலை நிலைகளில் மாற்றங்கள்.

நிலச் சீரழிவுக்கான காரணங்கள்:

காடழிப்பு 
காற்று அல்லது நீரினால் மண் அரிப்பு
சுரங்க தொழில்மயமாக்கல் 
நிலையற்ற விவசாய நடைமுறைகள். 
நகர்ப்புற விரிவாக்கம்.

காற்று மாசுபாடு:

காற்று மாசுபாட்டின் பொருள் மற்றும் வரையறை:

சாதாரணமாக காற்றில் ஆக்ஸிஜன், கார்பன்டை ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆகியவற்றோடு பல்வேறு இதர வாயுக்களும் குறிப்பிட்ட விழுக்காட்டு அளவில் விரவியுள்ளன. ஆனால் எரிமலை வெடித்தல், மணற்காற்று, புழுதிப்புயல், பெரும் தீ விபத்தால் ஏற்படும் புகை மண்டலம் ஆகிய இயற்கை 'நிகழ்வுகளாலோ' அல்லது மனித நடவடிக்கைகளாலோ, ஆக்ஸிஜனைத் தவிர காற்றில் உள்ள இதர வாயுக்களின் அடர்த்திநிலை அதிகரிக்கும்போதும், மிதக்கும் திடக் கழிவுகளின் அளவு உயரும்போதும், காற்று மாசுபடுகிறது எனலாம்.

புகை, தூசி மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களால் காற்று மாசுபடுவது காற்று மாசுபாடு என்று அழைக்கப்படுகிறது.

 காற்று மாசுபடுதலுக்கான மூலங்கள் (Sources of Air Pollution)

காற்று மாசுபடுவதற்கான இரண்டு முக்கிய மூலங்களாவன:

1. இயற்கை மூலங்கள் : எரிமலை வெடிப்புகள், மணற்காற்று, புழுதிப்புயல், அநீதமான காட்டுத்தீ, இயற்கைத் தாவரங்கள் போன்றவை.

2.மனிதனால் உருவாக்கப்படும் மூலங்கள் அல்லது மனித செயல்கள்: தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், நகர மையங்கள், விமானங்கள். அணுச் சோதனைகள், மோட்டார் வண்டிகள், வேளாண்மை, ஆற்றல் உற்பத்தி நிலையங்கள் போன்றவை.

காற்று மாசுபடுதலின் பல்வேறு மூலங்களிலிருந்து பலவகையான மாசுபடுத்திகள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இந்த மூலங்களிலிருந்து வெளியேற்றப்படும் முக்கிய காற்று மாசுபடுத்திகள் பின்வருமாறு :

கார்பன் சேர்மங்கள்.
கந்தகச் சேர்மங்கள்
நைட்ரஜனின் சேர்மங்கள்
ஃபுளுரோ கார்பன்கள் 
ஹைட்ரோ கார்பன்கள்
 உலோகங்கள்

காற்று மாசுபடுதலின் வகைகள்: (Types of Air Pollution) 
'காற்று மாசுபடுதல்' இரண்டு கருத்துகளின் அடிப்படையில் வகைபாடு செய்யப்படுகின்றன. அவை பின்வருமாறு:
1. மாசுபடுத்திகளின் வகைபாடு அடிப்படையில்

2. மாசுபடுத்தி மூலங்களின் வகைபாடு அடிப்படையில்

1.மாசுபடுத்திகளின் வகைபாடு அடிப்படையில், காற்று மாசுபடுதலை மேலும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். 

a) வாயு நிலையான மாகபடுத்திகள்
b) துணுக்குகளாலான காற்று மாசுபடுத்திகள்

2.மாசுபடுத்தி மூலங்களின் வகைபாடு அடிப்படையில் காற்று மாசுபடுதல் மேலும் 6 பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
a) வாகனங்கள் வெளிப்படுத்தும் மாசுபடுத்திகள்
b) தொழிற்சாலைக் கழிவுகளிலிருந்து தோன்றும் மாசுபடுத்திகள்
c) அனல் நிலையங்களில் தோன்றும் மாசுபடுத்திகள்
d) நகரப்புற மாசுபடுத்திகள்
e) கிராமப்புற மாசுபடுத்திகள்
f) அணு உலைகள் தோற்றுவிக்கும் மாசுபடுத்திகள்

நீர் மாசுபாடு:
நீர் மாசுபடுதல் என்பது உணவு, மனித மற்றும் பிராணி நலம், வேளாண்மை, மீன் பிடித்தல் அல்லது ஓய்வு நேரச் செயல்கள் ஆகியவற்றை ஆபத்தானதாக அல்லது பொருத்தமற்றதாக ஆக்கிடும் இயற்கையான அல்லது தூண்டப்பட்ட தீர்த்தரத்தின் மாற்றம் என்று வரையறை செய்யப்படுகிறது - பி. விவியர் (P. Vivier) (1958)

நீர் மாசுபடுதல் காரணங்கள்:

✓நீரின் இயற்பியல், வேதியல், உயிரியல் அம்சங்களில் காணப்படும் தரக் குறைபாடு

✓மனிதன், பிராணிகள், பயிர்கள், சுற்றுச்சூழல் தரம் ஆகியவற்றுக்கு தீங்கிழைத்தல்,

✓சுற்றுச்சூழலின் தாத்தில் குறைபாடு ஏற்படுதல்.
நீர் மாசுபாட்டின் ஆதாரங்கள்:
நீர் மாசுபாட்டின் முக்கிய ஆதாரங்கள்:
i) நகரங்களில் கழிவுநீர் மற்றும் பிற கழிவுகள்
ii) தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவு பொருட்கள்
iii) விவசாய வெளியேற்றம் (ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு)
iv) எண்ணெய் மாசு 

நீர் மாசுபாட்டின் வகைகள்:
நீர் மாசுபாட்டை நீர் சேமிப்பின் அடிப்படையில் பிரிக்கலாம்:

i) மேற்பரப்பு நீர் மாசுபாடு
in) ஏரி நீர் மாசுபாடு
in) நிலத்தடி நீர் மாசுபாடு
in) கடல் நீர் மாசுபாடு மற்றும்
v) நதி நீர் மாசுபாடு

நீர் மாசுபாட்டின் ஆதாரங்களின் அடிப்படையில் நீர் மாசுபாடு வகைப்படுத்தப்படுகிறது, எ.கா.

i) கழிவுநீர் மாசுபாடு
ii) வீட்டுக் கழிவு மாசுபாடு
iii) தொழிற்சாலை கழிவு நீர் மாசுபாடு, மற்றும்
iv) திடக்கழிவு நீர் மாசுபாடு
 v) விவசாய கழிவு வெளியேற்றம் (ரசாயன உரங்கள்,
பூச்சிக்கொல்லிகள்)

சுற்றுச்சூழல் சீரழிவு - உணவு மற்றும் ஆரோக்கியத்தின் மீதான தாக்கம்:

சுற்றுச்சூழல் சீரழிவு உணவின் தரம் மற்றும் அளவு ஆகியவற்றில் ஆழமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகரிப்பதால் இரும்பு, துத்தநாகம் மற்றும் வைட்டமின் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் குறைகிறது. முதலாவதாக, உணவு உற்பத்தி தொடங்குவதற்கு முன்பே, விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் நிலத்தை அழிக்க இயற்கை வாழ்விடங்களும் சுற்றுச்சூழல் அழிக்கப்படுகின்றன. மக்கள் தொகை குறைவிற்கான முக்கிய காரணங்களில் ஒன்று வாழ்விடம் இழப்பு.

உணவு உற்பத்தியின் சுற்றுச்சூழல் பாதிப்புகள்:

∆ விவசாயத்தில் ரசாயனங்களின்   
   பயன்பாடு. 
 
∆ வள பயன்பாடு மற்றும் கிரீன்ஹவுஸ்        
    வாயு வெளியேற்றம். 

∆ உணவு உற்பத்திக்குப் பிறகு.

∆ உணவு கழிவு.

சுற்றுச்சூழல் மாசுபாடுகள் சுவாச நோய்கள், இதய நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்கள் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். குறைந்த வருமானம் உள்ளவர்கள் மாசுபட்ட பகுதிகளில் வாழ்வதற்கும் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்வதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
ஆரோக்கியத்தைப் பாதிக்கும் சுற்றுச்சூழல் காரணிகள்:

இரசாயன பாதுகாப்பு.
காற்று மாசுபாடு.
காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை பேரழிவுகள்.
நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்கள்.
சுகாதார பராமரிப்புக்கான அணுகல் இல்லாமை.
உள்கட்டமைப்பு பிரச்சினைகள்.
மோசமான நீரின் தரம்

உலகம் முழுவதும் உள்ள சமீபத்திய சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள்:

உலக வெப்பமயமாதல்
காற்று மாசுபாடு
காடழிப்பு
நீர் மாசுபாடு
ஓசோன் சிதைவு
பல்லுயிர் இழப்பு
பெருங்கடல் அமிலமயமாக்கல்
அமில மழை
பாலைவனமாக்கல்
அதிகப்படியான மீன்பிடித்தல்
தண்ணீர் பற்றாக்குறை
வாழிடங்கள் அழிக்கப்படுதல்
பிளாஸ்டிக் மாசு
பள்ளி சுற்றுச்சூழல் ஆய்வு:

நான் மேட்டமலையில் உள்ள பி.எஸ்.என்.எல் கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பி.எட்., படித்து வருகிறேன்.XXXXXXXXXXXXXX உயர்நிலைப் பள்ளியில், XXXXXX எனது 16 வார காலம் பயிற்சியின் போது மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் கணக்கெடுப்பைப் பார்ப்போம்



 பள்ளி நுழைவாயில் 
 

வகுப்பறை:

பள்ளியில் மாணவர்களுக்கு போதுமான பெஞ்சுகள் மற்றும் நாற்காலிகள் கொண்ட சிறந்த வகுப்பறை வசதி. 

கற்றல் நடைபெறக்கூடிய இடமாக வகுப்பறை செயல்பட்டது.

இது கவனச்சிதறலைக் குறைத்து, செறிவுக்கு உதவக்கூடும்.

வகுப்பறைகள் மாணவர்களால் சுத்தம் செய்யப்பட்டு நேர்த்தியாக பராமரிக்கப்படுகின்றன.

மொத்தத்தில் வகுப்பறை சுகாதாரமாகவும் காற்றோட்டமாகவும் இருந்தது


வகுப்பறை
ஆய்வகம்:
§ இப்பள்ளியில் முறையான ஆய்வக வசதி உள்ளது.

§ அறிவியல் ஆய்வு, பரிசோதனைகள் மற்றும் அளவீடுகள் செய்யக்கூடிய நிலைமைகளை அறிவியல் ஆய்வகம் கட்டுப்படுத்துகிறது.

§ இந்த ஆய்வகத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற பல்வேறு கருவிகள் மற்றும் உபகரணங்கள் கலோரிமீட்டர், பன்சன் பர்னர், உடல் சமநிலை, நுண்ணோக்கி, திருகு அளவி,போன்றவை பயன்படுத்தப்படுகிறது.
§ சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க ஆய்வக கழிவுகளை சரியான முறையில் பிரித்தெடுத்தனர்.

§ மாணவர்களுக்கு கணினி ஆய்வகமும் வழங்கப்பட்டுள்ளது.

§ ஆய்வகத்தில் கற்றல் இடங்களும் காணப்படுகின்றன.

§ மாணவர்கள் தேர்வு எழுத கணினி ஆய்வகத்தை பயன்படுத்துகின்றனர்.

ஆய்வக படம் 

நூலகம்:

புத்தகங்கள் அலமாரியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நூலகத்தில் பல வகைப் புத்தகங்கள் உள்ளன.
புத்தகங்களை கதை, வினாடி வினா, அகராதி, பத்திரிகைகள், போட்டி புத்தகங்கள், நாவல்கள் என வகைப்படுத்தலாம்.
நூலகம் காற்றோட்டமும் அமைதியாகவும் இருந்தது.
நூலகத்தில் தினசரி நாளிதழ் படித்து மாணவர்கள் அறிவை மேம்படுத்துகிறார்கள்.

நூலகப் படம் 



விளையாட்டு மைதானம்:

✓பள்ளியில் மாணவர்கள் விளையாட பெரிய திறந்தவெளி விளையாட்டு மைதானங்களில் தடகளம், கைப்பந்து கால் பந்து ,பூப்பந்து போன்ற அதிக விளையாட்டுகளை விளையாடுவதற்கான வசதிகளும் உள்ளன.

✓அனைத்து மாணவர்களுக்கும் விளையாட்டு விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

✓விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் தங்களுடைய விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் விதமாக இருந்தது.


விளையாட்டு மைதான படம்

பள்ளிச் சூழல்:

பள்ளியின் உள்கட்டமைப்பு நன்றாக உள்ளது. 

பள்ளி வளாகத்திற்குள் தூய குளிரூட்டல் உள்ளது.
ஏனென்றால் அதற்குள் பல மரங்கள் வளர்ந்திருந்தன.

வளாகம் எப்போதும் தூய்மையாகவும் சுத்தமாகவும் இருக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு போதுமான வகுப்பறைகள் உள்ளது.

பள்ளி சுற்றுச்சூழல் படம் 
கழிப்பறை வசதி:

படிக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தனித்தனி கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கழிவறைகளை அடிக்கடி சுத்தம் செய்யப்படும்.
மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுகாதாரமாக பராமரிக்கப்பட்டது.



கழிப்பறை படம். 



குடிநீர் வசதிகள்:

🙏 தண்ணீர் தொட்டியில் எப்போதும் தண்ணீர் நிரப்பப்படும்.

🙏 தண்ணீரை பயன்படுத்த முறையான குழாய் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

🙏 மாணவ, மாணவியர் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தினார்கள்.


குடிநீர் தேங்கி


மரம்நடவுதல்:

எனது 16 வார பயிற்சியின் போது மரக்கன்றுகளை நட்டு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தினோம்
இந்த முயற்சியில் பள்ளி தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் அனைவரும் எங்களுடன் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
மரம்நடடுதல் படம் 







கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள்:

 மரம் நடுதல் 
புகைப்படம் இடது பக்கம்



மரம் நடுதல் என்பது நமது சமுதாயத்திற்கு அவசியமான ஒன்று என்பதால்
நமது சுவாசத்திற்கு ஆதாரமாக இருக்கும் ஆக்ஸிஜனை கொடுக்கிறது மற்றும் அது மழையின் மூலமாகும். கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியரின் வழிகாட்டுதலின் கீழ் 
 எங்கள் கல்லூரி வளாகத்தில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினம் அன்று மரங்களை நட்டோம்.

மரம் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் 
புகைப்படம் இடது பக்கம்.

நீர்ப்பாசனம் என்பது பயிர்களுக்கு சீரான இடைவெளியில் கட்டுப்படுத்தப்பட்ட அளவு தண்ணீரை வழங்கும் முறையாகும். நீர்ப்பாசனம் தாவரங்களை வளர்க்கவும், மண்ணின் கட்டமைப்பை பராமரிக்கவும், மழை இல்லாத காலங்களில் வறண்ட பகுதிகளில் மண் வளத்தை பராமரிக்கவும், மேலும் பசுமையை மீட்டெடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, எங்கள் கல்லூரியில் வாரம் மூன்று முறை மரம், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறோம். __________ இந்நாளில் சிறப்பு நிகழ்ச்சியாக எங்கள் முதல்வர் மற்றும் பேராசிரியர் (உயிரியல் அறிவியல்.) முன்னிலையில் அனைவரும் கலந்து கொண்டோம்.

கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்தல்

புகைப்படம் இடது பக்கம்.
தற்போது அதிரும் டெங்கு காய்ச்சலால் மக்கள் பீதியடைந்துள்ளனர்
கொசுவை முற்றிலும் ஒழிக்க தமிழகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. எங்கள் கல்லூரி மாணவர்கள் வாரம் ஒருமுறை கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்கிறார்கள். ஒரு சிறப்பு நிகழ்வில், மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் (உயிரியல் அறிவியல்) முன்னிலையில், நாங்கள் கல்லூரியை சுத்தம் செய்தோம்._____________நாள்
மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தல்.

புகைப்படம் இடது பக்கம்.

--------------- இந்நாளில் எமது கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர், மக்கும் மற்றும் மக்காத குப்பை நாங்கள் பிரிக்கும் பணியில் ஈடுபட்டோம்.
பின்னர் மரக்கழிவுகளை தரம் பிரித்தோம் மற்றும் காகிதம் தனித்தனியாக மற்றும் பாலித்தீன் காகிதங்கள், கண்ணாடி துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை தனித்தனியாக குப்பை தொட்டியில் சேகரித்தோம்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 


சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில்,விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிப்ரவரி 28 ஆம் நாள் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடத்தினோம்.எங்கள் கல்லூரி முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் உயிர் அறிவியல் துறை உதவிபேராசிரியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி விரிவுரை ஆற்றினார். மேலும் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாவரவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் தமிழரசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பல்வேறு விதமான போட்டிகள் மற்றும் மௌன நாடகம் அறிவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பாடல்/வாசகம்/நாடகம் ஒவ்வொரு மாணவரும் தாங்களாகவே எழுதவும்.
உதாரணத்திற்கு:  
பாடல் 
வெட்டப்பட்ட மரங்களால்

வெப்பமானது புவிப்பந்து

துளிமழையும் நனைக்கவில்லை துயருண்ட விளை நிலத்தை...

தொழிற்சாலைப் பெருக்கத்தினால்

சுருங்கிப் போனது சுவாசக்காற்று பாலித்தீன் குப்பைகளால்

பலியாகும் வனவிலங்கு பொழிசை

பட்டியலோ நெடுந்தொடராய...

ஓசோனில் ஓட்டையிட்டும் ஓயவில்லை

மண்ணில் மாசோட்டம்

தொழிற்நுட்ப வளர்ச்சியென

தொலைக்கிறோம் இயற்கையினை

இழந்தபின் இயலுமா சுற்றுச்சூழலைச் சீரமைக்க…


வாசகம்:

மரம்வளர்ப்போம்!
மழை பெறுவோம்!

பிளாஸ்டிக்கை ஒழிப்போம்
சுகாதாரம் பேணுவோம்
தூய்மை இந்தியா உருவாக்குவோம்!

இனியாவது திருந்துவோம்!
இயற்கையை நேசிப்போம்!!

இனங்களை அழித்துவிட்டு தினங்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.








சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நாடகம்:

‘எனது குப்பை எனது பொறுப்பு’

காட்சி 1

இடம் : வீடு

நேரம் : காலை மணி 07:30

மாந்தர்கள் : அப்பா, அம்மா, குழந்தைகள் கணேஷ், காயத்ரி

‘காலை மாலை நடு இரவும் சுத்தம் காப்போமே....

சாலை வீடு பொது இடமும் அழகாய் வைப்போமே....

நாளை தலைமுறையை நாம் இன்றே காப்போமே....

எனது குப்பை எனது பொறுப்பு என உறுதி எடுப்போமே.’

புதிய விழிப்புணர்வுப் பாடலுடன் சென்னை மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் ஆட்டோ தெருவுக்குள் நுழைகிறது)

அம்மா: என்னங்க... பாட்டு சத்தம் கேக்குது... குப்பை வண்டியா பாருங்க?

அப்பா: ஆமாம். குப்பை வண்டிதான்.

அம்மா: ஏங்க... உங்ககிட்ட கதையா கேட்டுக்கிட்டு இருக்கேன். குப்பை வண்டின்னா குப்பையை கொட்டிட்டு வாங்க. சமையக்கட்டுல வேலையா இருக்கேன். எனக்கு மட்டும் பத்து கையா இருக்கு.

அப்பா: டேய். பசங்களா.... கணேஷ்.... காயத்ரி…

கணேஷ்: அப்பா... ஸ்கூலுக்கு நேரம் ஆச்சுப்பா...

காயத்ரி: ஆமாம்பா. எனக்கும் டைம் ஆச்சுப்பா.

அப்பா: சரி, சரி... ரொம்ப பிகு பண்ணாம சீக்கிரம் வாங்க... மொத்தம் மூணு குப்பைக் கூடை இருக்குல்ல. ஆளுக்கு ஒண்ணை தூக்கிட்டு வாங்க. நானும் ஒண்ணை எடுத்துக்கிட்டு வரேன்... குப்பை வண்டி வாசல்ல நிக்குது. இப்போ விட்டோம்னா அப்புறம் குப்பை சேர்ந்துரும். 

கணேஷ்: எதுக்குப்பா மூணு குப்பைக் கூடை? ஒரு குப்பைக் கூடை போதாதா? 

காயத்ரி: ஆமாம்பா. நானும் அதைத்தான் கேக்கணும்னு நினைச்சேன்... 

அப்பா: காரணத்தைச் சொல்ல இப்போ நேரமில்லை. சொன்னதைச் செய்யுங்க... ராத்திரி சாப்பிடும்போது மூணு கூடைக்கான விவரத்தை சொல்றேன். குப்பையைக் கொட்டிட்டு ஸ்கூலுக்கு கிளம்பற வழியைப் பாருங்க.

(குப்பையைக் கொட்டிவிட்டு குழந்தைகள் பள்ளிக்கும், அப்பா அலுவலகத்துக்கும் புறப்படத் தயாராகின்றனர். அம்மா அனைவரையும் அனுப்பிவிட்டு வீட்டு வேலையில் மூழ்கி விடுகிறார்)
***************

காட்சி 2

இடம் : வீடு

நேரம் : இரவு